Aanai Mugathan Pillaiyar Song Lyrics in Tamil
ஆனை முகத்தான் அரன்
ஐந்து முகத்தான் மகன்
ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்
ஆனை முகத்தான் அரன்
ஐந்து முகத்தான் மகன்
ஆறுமுகத்தானுடன் அவதரித்தான் அவன்
ஆனை முகத்தான் அரன்
ஐந்து முகத்தான் மகன்
ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்
ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான்
ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான்
தன்னை நம்பியவர்கெல்லாம் கை கொடுப்பான்
தன்னை நம்பியவர்கெல்லாம் கை கொடுப்பான் உடன்
ஆனை முகத்தான் அரன்
ஐந்து முகத்தான் மகன்
ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்
ஓம் எனும் பிரணவ நாதமே அவன் தொடக்கம்
உலகமெல்லாம் அவன் வயிற்றினிலே அடக்கம்
ஓம் எனும் பிரணவ நாதமே அவன் தொடக்கம்
உலகமெல்லாம் அவன் வயிற்றினிலே அடக்கம்
கானல் நீர் வாழ்க்கை கடல் அதனைக் கடக்கும்
கானல் நீர் வாழ்க்கை கடல் அதனைக் கடக்கும்
தோணியாக வந்து துதிக்கையால் அணைக்கும்
தோணியாக வந்து துதிக்கையால் அணைக்கும்
ஆனை முகத்தான் அரன்
ஐந்து முகத்தான் மகன்
ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்
வெள்ளை உள்ளம் என்னும் வீட்டினில் குடியிருப்பான்
வீதி தோறும் இன்றே வேண்டும் வரம் அளிப்பான்
வெள்ளை உள்ளம் என்னும் வீட்டினில் குடியிருப்பான்
வீதி தோறும் இன்றே வேண்டும் வரம் அளிப்பான்
அள்ளி எடுத்த பிடி மண்ணிலும் அவன் இருப்பான்
அள்ளி எடுத்த பிடி மண்ணிலும் அவன் இருப்பான்
ஐங்கரத்தான் அவன்தான் அனைத்திற்கும் முன்னிற்பான்
ஐங்கரத்தான் அவன்தான் அனைத்திற்கும் முன்னிற்பான்
ஆனை முகத்தான் அரன்
ஐந்து முகத்தான் மகன்
ஆறுமுகத்தானுடன் அவதரித்தான் அவன்
ஆனை முகத்தான் அரன்
ஐந்து முகத்தான் மகன்
ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்